மதுரை அருகே விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் லாரியும் ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. லாரி மோதியதில் ஆட்டோவில் வந்த 6 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் பள்ளி மாணவிகள் உட்பட 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த மூவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்து குறித்தும், பலியானவர்கள் யார் என்பது குறித்தும் முதற்கட்ட விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.