Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கேட்டும் கிடைக்கல…”முடிவெடுத்த அதிமுக”…. ஏமாந்த தேமுதிக…. காலியான கூட்டணி …!!

அதிமுக கூட்டணியில் மாநிலங்களவை சீட் கேட்ட தேமுதிகவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 26 இல் தேர்தல் நடைபெறுகின்றது. திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், இளங்கோவன் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு , இன்று வேட்புமனுத்தாக்கள் செய்துள்ளனர். அதிமுக வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ,துணை ஒருங்கிணைப்பாளர் கூட்டு அறிக்கையின் மூலம் அதிமுகவின் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தனர்.

அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி.முனியசாமி , கரூர் தொகுதியில் தோல்வியடைந்த தம்பிதுரைக்கு கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் ஆகிய 3 பேருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. எங்களுக்கு ஒரு சீட் வழங்க வேண்டுமென்று தேமுதிக தெரிவித்த நிலையில் அவர்களுக்கு வழங்காமல் GK வாசனுக்கு வழங்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DMDK VS ADMKக்கான பட முடிவுகள்

அதிமுக கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட் கொடுப்பர் என்று  நம்புகிறோம் என்று பிரேமலதா தொடர்ச்சியாக அடுத்தடுத்த அந்த பேட்டிகளில் கூறிவந்தார. அதே போல அக்கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் முதலமைச்சரின் சந்தித்து பேசி இருந்தார். இருந்தபோதிலும் தேமுதிக வாய்ப்பு கொடுக்கப்படாமல் ஜி கே வாசன் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது கூட்டணியில் பிளவை உறுதி படுத்தியுள்ளது.

Categories

Tech |