Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இறுதிப் போட்டியில் எடுக்கப்பட்ட முடிவு நியாயமானதல்ல” கேப்டன் மோர்கன்..!!

பரபரப்பாக நடந்த “இறுதிப்போட்டியில் எடுக்கப்பட்ட முடிவு நியாயமானதல்ல” என்று இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார் 

கடந்த ஞாயிற்றுக்கிழமை  லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற  பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள்  மோதியது. இப்போட்டி இதுவரையில் யாரும் பார்த்திராத அளவிற்கு பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்திருந்தது. போட்டி ‘டை’ ஆனதால் சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரிலும் முடியாமல்  இரண்டு அணிகள் 15 ரன்கள் எடுத்து  ஆட்டம் ‘டை’ ஆனது.  ஐசிசி விதிகளின் படி அதிக பவுண்டரிகள் அடித்த அடிப்படையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றதாக அறிவிக்கப்பட்டது. உலக கோப்பையின் இறுதி போட்டி முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் ரசிகர்கள் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில்  இது குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் கருத்து தெரிவித்துள்ளார்.அதில் மிகவும் பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில் எடுக்கப்பட்ட முடிவு நியாயமானதல்ல. இந்த போட்டியில் ஒரு தருணம் கூட வெற்றி வாய்ப்பு  ஒரு அணிக்கு சாதகமாக இருக்கவில்லை. இரண்டு அணிகளும் சம பலத்துடன் விளையாடியது.

மேலும் அவர், இப்போட்டி குறித்து நான் நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சனிடமும் பேசினேன். நான் குழப்பத்தில் இருப்பதை போலவே அவரும் குழப்பத்தில் இருந்து வருகிறார். கிரிக்கெட் வரலாற்றில் இந்த இறுதிப்போட்டி மிகவும் சிறப்பு வாய்ந்த போட்டியாக அமைந்தது. இது போன்ற போட்டி வேறு எப்போதும் நடைபெற்றதில்லை. இருப்பினும் நாங்கள் உலக கோப்பையை வென்றுள்ளோம். அதற்கு நான் மகிழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Categories

Tech |