Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை அணிக்கு 148 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது டெல்லி அணி…..!!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு  147  ரன்கள் குவித்துள்ளது.   

ஐ.பி.எல்லில்  இன்று  5 ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டி டெல்லியில் உள்ள  பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது.  டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து ப்ரித்வி ஷாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். தொடக்கத்தில் ப்ரித்வி ஷா அதிரடியாக வியாடிய நிலையில் 24 (16) ரன்கள் எடுத்திருந்த போது தீபக் சாஹர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வந்த ஷ்ரேயஸ் ஐயரும் நிலைக்கவில்லை. அதன் பின் பெரிதும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய ரிசப்பன்ட் 25 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து வந்த வீரர்கள் இங்ரம் 2, கீமோ பால் 0, ரன்களில் ஆட்டமிழக்க  தொடக்கத்தில் களமிறங்கிய  தவான் நிதானமாக விளையாடி  51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 147 ரன்கள் குவித்தது. சென்னை அணி 148  ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்க உள்ளது.சென்னை அணியில் அதிகபட்சமாக பிராவோ 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Categories

Tech |