டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் குவித்துள்ளது.
12 – ஆவது ஐ.பி.எல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 16 வது லீக் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 129 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 43 (41) ரன்களும், கடைசியில் அக்சர் பட்டேல் 23 (13) ரன்கள் குவித்தார்.
மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். சன்ரைசர்ஸ் அணியில் அதிக பட்சமாக புவனேஸ்வர் குமார், முகமது நபி, சித்தார்த் கவுல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ரஷித் கான், சந்தீப் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். தற்போது சன்ரைசர்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோவும், டேவிட் வார்னரும் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.