புதுச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும் புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் துறை சார்பில், துணை தலைவர் மதிவாணன் இன்று புதுச்சேரி செய்தியாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்; டிசம்பர் 26ஆம் தேதி காலை 8:08 மணி முதல் 11:19 மணி வரை, மொத்தம் 3 மணிநேரம் 11 நிமிடங்கள் சூரிய கிரகணம் காட்சியளிக்க உள்ளது.
இதற்காக புதுவை அறிவியல் இயக்கம் புதுவை அரசின் அறிவியல் தொழில்நுட்ப மற்றும் சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து புதுவையில் 40 இடங்களில் இதை காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் காந்தி சிலை, பாகூர், லாஸ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்குப்பிறகு இந்த சூரிய கிரகணத்தை 2031ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி காண முடியும். இதற்காக பதினொரு வருடங்கள் காத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.