பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்காக பாடுபடும் அனைவரையும் பாராட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார்.
தேசிய பெண் குழந்தைகள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 24 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் குழந்தையின் வளர்ச்சிக்கு உழைப்பவர்களை வாழ்த்திட வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார்.
அதில்,அனைத்து துறைகளிலும் சாதிக்கும் பெண் குழந்தைகளை வணங்குகிறோம். மத்திய அரசு குழந்தைகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. மேலும் இந்நாளில் பெண் குழந்தைகள் வளர்ச்சிக்காக பாடுபடும் அனைவரையும் பாராட்ட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.