இங்கிலாந்து நாட்டின் பிரதமராக லிஸ்ட் ட்ரஸ் இருக்கிறார். இவருடைய அமைச்சரவையில் உள்துறை மந்திரியாக இந்திய வம்சாவழியை சேர்ந்த சுவெல்லா பிரேவர்மேன் என்பவர் இருக்கிறார். இவருடைய பெற்றோரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தான். அதாவது தமிழகத்தைச் சேர்ந்த இந்து மதத்தை சேர்ந்த உமா என்பவருக்கும், கோவாவை சேர்ந்த கிறிஸ்டி பெர்னாண்டஸ் என்பவருக்கும் மகளாக பிறந்தவர்தான் சுவெல்லா. இந்நிலையில் உள்துறை மந்திரி ஒரு பிரபல பத்திரிகை நிறுவனத்திற்கு தற்போது பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கிறது. இவர்கள் தங்களை சார்ந்து இருப்பதால் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. ஒருவேளை வேலைக்கு சென்றாலும் கூட குறைவான திறன் கொண்ட வேலைகளில் தான் சேருகின்றனர்.
அவர்கள் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வித பங்களிப்பையும் ஆற்றுவது கிடையாது. இதன் காரணமாக நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக புலம்பெயர்வோரின் எண்ணிக்கையை குறைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு குடியுரிமை கொள்கையை மறு ஆய்வு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் லிஸ்ட் டிரஸ்ஸின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து அமைச்சர்களும் குடியுரிமை தொடர்பான தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் தற்போது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உள்துறை மந்திரியின் கருத்து பெரும் சர்ச்சை ஆகியுள்ளது. மேலும் உள்துறை மந்திரியின் கருத்தால் இங்கிலாந்து நாட்டிற்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் வேலை தேடி செல்பவர்களுக்கு வேலை கிடைக்காத சூழ்நிலை ஏற்படலாம் என்ற அச்சம் எழுகிறது.