மும்பையில் வைரத்தால் அலங்கரிக்கப்பட்ட மெர்சிடஸ் பென்ஸ் கார் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு சர்வதேச அளவில் சந்தையை உருவாக்கி தருவதற்கான 3 நாள் வைர கண்காட்சி மும்பையில் நடைபெற்றது.
வைர வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த இந்த கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சின் சிறப்பு என்னவென்றால் மெர்சிடஸ் பென்ஸ் காரில் 3, 50,000 வைரங்கள் ஒட்டப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது தான்.
இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம். இந்த கண்காட்சியில் அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா, சவுத் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஏராளமான வணிகர்கள் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சி சர்வதேச அளவில் வைர விற்பனையை ஊக்குவிக்கும் என நம்பப்படுகிறது.