உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சி 2018 ஆம் ஆண்டு பின்னடைவை சந்தித்துள்ளது .
நாட்டின ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்திருப்பதால் பொருளாதார வலிமை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. 2018ம் ஆண்டு கணக்கீட்டின்படி உலக வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில் 20.5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்துடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.
சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் வழக்கம்போல் 2 முதல் 5 வரையிலான இடங்களில் இருக்கின்றனர். 2017 ஆம் ஆண்டு ஆறாவது இடத்திற்கு முன்னேறிய இந்தியா 2018ம் ஆண்டில் 7 வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் பொருளாதார வலிமை 2.7 லட்சம் கோடி டாலர் ஆகும்.
ஒரு ஆண்டில் 50 ஆயிரம் கோடி டாலர் அளவுக்கு மட்டுமே இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் 2.8 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்துடன் இந்தியாவை பின்னுக்கு தள்ளி பிரான்ஸ் மீண்டும் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. பொருளாதார வளர்ச்சி தளர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவையே இந்தியா பின்னடைவை சந்திக்க காரணம் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர்.