கமல் நடித்துள்ள விக்ரம் படம் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸாகியுள்ள திரைப்படம் ”விக்ரம்”.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், நடிகர் சூர்யா கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், விக்ரம் படம் பார்த்த ரசிகர்கள் கூறியதாவது, ‘மாஸ்டர்’ படத்தில் செய்த தவறை லோகேஷ் கனகராஜ் ‘விக்ரம்’ படத்தில் செய்யவில்லை.
அதன்படி, மாஸ்டர் படத்தில் விஜய்க்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக லோகேஷ் கனகராஜ் தனது ஸ்டைலை மாற்றிக்கொண்டது தான் மிகப்பெரிய தவறு. ஆனால் கமல் படத்தில் அனைவருக்குமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இந்த படம் கமல் படம் அல்ல. லோகேஷ் கனகராஜ் படம். இந்த படத்தில் சூர்யா வரும் காட்சிகளை மறக்கவே முடியாது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.