Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…. கண்டெய்னரில் பிண குவியல்…. லண்டனை அதிர வைத்த சம்பவம்..!!

தென்கிழக்கு இங்கிலாந்தில் எஸ்ஸெக்ஸ் பகுதியில் கண்டெய்னர் லாரியில் இருந்து 39 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள போலீசார், பல்கேரியாவிலிருந்து வந்த கண்டெய்னர் லாரியில் இருந்து 39 சடலங்களை மீட்டுள்ளனர். இதுகுறித்து தலைமை கண்காணிப்பாளர் ஆண்ட்ரூ மரைனர் கூறும்போது, 38 பெரியவர்களையும், ஒரு இளைஞனையும் அடையாளம் காண அதிகாரிகள் முயற்சித்து வருவதாக  இன்று (புதன்கிழமை) தெரிவித்தார்.

Image result for 39 bodies have been recovered in a container truck in the UK

மேலும் அக்டோபர் 19 -ஆம் தேதி லாரி நாட்டிற்குள் நுழைந்தது என்றும், “விசாரணைக்கு எங்கள் கூட்டாளர்களுடன் போலீசார் நெருக்கமாக பணியாற்றி வருகிறார்கள்” என்றும் மரைனர் கூறுகிறார்.

Image result for 39 bodies have been recovered in a container truck in the UK

போலீசார் விசாரணையில் ஒட்டி வந்தவர் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த 25 வயது டிரைவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். இது ஒரு சோகமான சம்பவம், ஏராளமான மக்கள் தங்கள் உயிர்களை இழந்துவிட்டனர்” என்று எசெக்ஸ் நகர போலீஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் போலீசார் இந்த சம்பவம் பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Categories

Tech |