மாயமான ஏர் விமானத்தின் கருப்பு பெட்டிகள் கடல்பகுதியில் மீட்புக்குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் கடல் பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று ஸ்ரீவிஜயா ஏர் விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்தில் பயணிகளுடன் மாயமானது. இதையடுத்து விமானம் விழுந்து நொறுங்கிய கடல் பகுதியில் தேர்தல் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். அப்போது போர்க்கப்பல் அந்த விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து வெளியாகும் சிக்கனல்களை வைத்து கண்டுபிடித்துள்ளது.
இது குறித்து தேடல் மற்றும் மீட்பு அமைப்பின் தலைவர் பாகுஸ் புரூஹீடோ கூறுகையில், கடல்பகுதியில் விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது விமானத்தில் இரண்டு கருப்பு பெட்டிகளும் இருக்கும் இடத்தை மீட்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் விமானமும், கருப்பு பெட்டிகளும் இருக்குமிடம் கண்டறியப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.