Categories
சென்னை மாநில செய்திகள்

இறந்தவர்களின் சடலத்திலிருந்து நோய் பரவாது; தகனம் செய்வதை தடுக்காதீர்கள்- சென்னை மாநகராட்சி வேண்டுகோள்!

கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதை தடுக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பெண்கள் உள்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடலில் இருந்து எந்த நோய்த்தொற்றும் பரவாது என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

கொரோனா வைரஸால் சில நல்ல மனிதர்களை நாம் இழக்கிறோம். கொரோனாவால் சிலர் இறப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. சக மனிதர்களாகிய நாம் உலகை விட்டு பிரிந்தவர்களை மரியாதையுடன் அனுப்ப வேண்டியது நம் கடமை. உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலின்படியே, கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடல் பாதுகாப்பான முறையில் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்படுகிறது.

எனவே மக்கள் பயப்படாமல், கொரோனாவால் இறந்தவர்களை உரிய மரியாதையுடன் வழியனுப்பி வைப்பது நமது கடமையாகும்உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலின்படியே, கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடல் பாதுகாப்பான முறையில் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்படுகிறது.

எனவே மக்கள் பயப்படாமல், கொரோனாவால் இறந்தவர்களை உரிய மரியாதையுடன் வழியனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார மையத்தின் அறிவுறுத்தலின்படியே, கொரோனா வைரஸால் இறந்தவர்களின் உடல் பாதுகாப்பான முறையில் அடக்கம் மற்றும் தகனம் செய்யப்படுகிறது. எனவே மக்கள் பயப்படாமல், கொரோனாவால் இறந்தவர்களை உரிய மரியாதையுடன் வழியனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நம் உலகில் இருந்து செல்பவர்களை மதிப்புடனும் மரியாதையுடன் அனுப்பி வைப்போம்!

Categories

Tech |