Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குளக்கரையில் பதுங்கியிருந்து… பிரபல ரவுடியை வெட்டிக்கொன்ற கும்பல்..!!

மயிலாடுதுறையில் பிரபல ரவுடி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை சேந்தங்குடி துர்க்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் என்பவரது மகன் பாபு.. 45 வயதுடைய இவர் திமுக நகரசெயற்குழு உறுப்பினராவார்.. இவரின் மீது நல்லாசிரியர் நீலகண்டன் கொலை உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன.

இந்தநிலையில் நேற்று இரவு 10 மணிக்கு கடைவீதிக்கு சென்றுவிட்டு பின் வீடு திரும்பிய போது வீட்டின் அருகேயுள்ள குளக்கரையில் பதுங்கியிருந்த மர்மகும்பல் ஒன்று திடீரென பாபுவை வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு அந்த கும்பல்  தப்பி ஓடியது.. இதில் பாபு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பாபுவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.. அதனைதொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.பி) ஸ்ரீநாத் சம்பவ இடத்த்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.. பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |