திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எந்த தொகுதி என்று ஸ்டாலின் அறிவிப்பார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் , மதிமுக , சி.பி.எம் , சி.பி.ஐ , வி.சி.க , ஐ.ஜே.கே , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஒப்பந்தமாகியுள்ளது. இந்நிலையில் கூட்டணி காட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகின்றன என்று இறுதி செய்யும் பணியில் திமுக விரைந்து ஈடுபட்டு வருகின்றது.
அந்த வகையில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இரண்டு தொகுதி எது என்று இறுதி செய்ய ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் திமுகவின் தொகுதி பங்கீட்டுகுழு , ஸ்டாலின் கலந்துகொண்டடர் . விடுதலை சிறுத்தைகளை கட்சியின் சார்பில் தலைவர் தொல்.திருமாவளவன் பொதுச் செயலாளர் ரவிக்குமார் , துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கலந்துகொண்டனர் . இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம் மற்றும் சிதம்பரம் தொகுதி ஒதுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஆலோசனைக்கூட்டம் முடிந்து செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவிக்கையில் , தோழமைக் கட்சிகளுக்கான தொகுதிகள் அனைத்தும் முடிவாகிய பிறகு விடுதலை சிறுத்தை கட்சி களின் தொகுதி எதுவென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவிப்பார் என்று தெரிவித்தார் .இந்த பேட்டியில் திருமாவளவன் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தெரிவித்தார்.