கடந்த மே 21 ஆம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரியை 8 ரூபாயும், டீசல் மீதான வரியை 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்தது. இதனால் தமிழகத்தில் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை.தற்போது விரைவில் குஜராத் மற்றும் விமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் வர இருப்பதால் வருகின்ற தீபாவளிக்கு மக்களுக்கு பரிசாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செய்தி பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.