Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக பிரமுகர் தற்கொலை… இதுதான் காரணமா…? வெளியான பரபரப்பு தகவல்..!!

நாமக்கல் மருத்துவர் ஆனந்த் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன. 

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஐ சேர்ந்த 47 வயது டாக்டர் ஆனந்த் தனக்கு தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஏராளமான மர்மங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. பரமத்தி வேலூர் அருகே உள்ள செங்கப்பள்ளி கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆனந்தின் உடலை பரமத்தி வேலூர் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Image result for திமுக நாமக்கல் டாக்டர் ஆனந்த்

உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருக்கிறது. தற்கொலை செய்துகொள்ளும் முன்பாக டாக்டர் ஆனந்த் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அப்பொழுது தற்கொலை முடிவுக்கு வந்திருக்கும் தகவலை தெரிவித்திருக்கிறார். அதன் பெயரில் கோவையில் உள்ள முரளி என்ற நண்பர் ஆனந்த் தோட்டத்திற்கு விரைந்து வந்து உள்ளார். அவர் வருவதற்குள்ளாகவே ஆனந்தும் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

Image result for திமுக நாமக்கல் டாக்டர் ஆனந்த்

ஆனந்த் தற்கொலை முடிவில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அவற்றில் முக்கியமானது அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீஸ் காரணமாக கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறையிடம் இருந்து நோட்டீசை பெற்றது முதல் அவர் அதிர்ச்சியுடனும் மன அழுத்தத்துடனும் காணப்பட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் ஒன்றுக்கும் அதிகமான முறை அவர் பொள்ளாச்சி சென்று வந்திருக்கிறார்.

Image result for திமுக நாமக்கல் டாக்டர் ஆனந்த்

பொள்ளாச்சி என்றாலே ஏற்கனவே பல்வேறு விவகாரங்கள் குற்றங்கள் கிளம்பியுள்ள நேரத்தில் பொள்ளாச்சி சென்று திரும்பிய நேரத்திலும் ஆனந்த் தற்கொலை செய்துகொண்டிருப்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனந்த் பயன்படுத்திய ஐபோன் சோதித்தபோது அது முற்றிலுமாக அழிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.

Image result for திமுக நாமக்கல் டாக்டர் ஆனந்த்

எனவே தற்கொலை செய்து கொள்வதற்கு அமலாக்கத்துறை காரணமா அல்லது பொள்ளாச்சி விவகாரம் காரணமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. அதே நேரத்தில் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். ஆனந்துக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும் அபர்ணா என்ற மகளும் உள்ளனர்.

 

மேலும் சிதம்பரத்தின் மனைவி நளினி ஆனந்தின் உறவினர்  என்று கூறப்படுகிறது. ஏற்கனவே சிதம்பரம் குடும்பத்தினர் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ பிடியில் சிக்கி இருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாக ஆனந்துக்கு கொடுக்கப்பட்ட நெருக்கடியே அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தள்ளி இருக்கிறது என்ற சந்தேகமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |