வருகின்ற 17 ஆம் தேதி திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என கழக பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக பொது செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் வருகின்ற வருகின்ற 17-02-2020 திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கத்தில்” நடைபெறும்.
இதில் மாவட்டக் கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
’கழக பொதுச்செயலாளர் அவர்கள் அறிவிப்பு’
கழக தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம்
நாள்: 17-02-2020
இடம்: சென்னை, அண்ணா அறிவாலயம் pic.twitter.com/5no4ZrMdRK— DMK (@arivalayam) February 10, 2020