Categories
அரசியல் மாநில செய்திகள்

“முறைகேடாக செயல்படும் அதிமுக”… தேர்தல் ஆணையத்திடம் திமுக மீண்டும் புகார்..!!

மறைமுக தேர்தலில் அதிமுக முறைகேடாக செயல்பட்டு வருகின்றது என திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று  27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, 306 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் ஐந்து பதவிகளுக்கு தேர்தல் நடந்து வருகின்றது.

மறைமுக தேர்தல் வீடியோ பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. ஆகவே அணைத்து இடங்களிலும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒரு சில இடங்களில்  அதிமுக திமுக கட்சிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.  தற்போது மாவட்ட ஊராட்சி தலைவர் போட்டியில் அதிமுக 11 மாவட்டங்களையும், திமுக 8 மாவட்டங்களையும் கைப்பற்றியுள்ளது. அதேபோல ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி போட்டியிலும் அதிமுக 119 ஒன்றியத்திலும், திமுக 72 ஒன்றியத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

இதனிடையே  திமுக சார்பில் டி ஆர் பாலு, ஆர்.எஸ் பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர் அதிமுக முறைகேடாக செயல்பட்டு வருகின்றது என தேர்தல் ஆணையர் பழனிசாமியிடம் புகார் மனு அளித்தனர். மேலும் மறைமுக தேர்தலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடங்களில் தேர்தல் நடத்துமாறு கூறியுள்ளது. ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் அதிமுக முறைகேடாக செயல்படுகிறது என புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |