Categories
அரசியல்

திமுக எம்எல்ஏ., ஜெ. அன்பழகன் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது… முதல்வர் பழனிசாமி இரங்கல்!!

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ஜெ.அன்பழகன் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என முதல்வர் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த 10 நாட்களாக அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை 8.05 மணிக்கு அன்பழகன் உயிர் பிரிந்தது. ஜெ. அன்பழகனின் மறைவு திமுகவினரை பெரும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஜெ.அன்பழகன் மறைவுக்கு அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் அதிமுக அமைச்சர்களும் அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது என அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |