Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உயிரிழப்பு!

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது மருத்துவர் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று மேலும் 106 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனாவால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை 1,075 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது. மேலும் தமிழகத்தில் 8 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என பீலா ராஜேஷ் தகவல் அளித்திருந்தார். இந்த நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது மருத்துவர் உயிரிழந்துள்ளார்.

ஆந்திராவை மாநிலம் நெல்லூரை சேர்ந்த இவர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆந்திராவில் இவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 4ம் தேதி சென்னையில் பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்று உயிரிழந்துள்ளார். தற்போது அவரது உடலை அடக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அம்பத்தூர் அல்லது திருவேற்காடு மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே கோவையில் அரசு மருத்துவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் 2 மருத்துவர்களுக்கு கொரோனா சிகிச்சை நடைபெறுகிறது. மேலும் பணியில் இருந்த 20 மருத்துவர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டு வருகிறது.

Categories

Tech |