Categories
Uncategorized

குறுக்கே வந்த நாயால்…. குளத்தில் விழுந்த ஆட்டோ…. பத்திரமாக மீட்கப்பட்ட ஓட்டுநர்…!!

நெல்லை தச்சநல்லூர் பகுதியில் வசிப்பவர் பரமசிவன். இவர் பயணிகள் ஆட்டோ வைத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார் . இந்நிலையில் இவர் வழக்கம்போல் இன்று காலை நெல்லை-மதுரை சாலை தச்சநல்லூரிலிருந்து நெல்லை சந்திப்பு நோக்கி பயணிகள் இல்லாமல் ஆட்டோவை ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். அப்போது ஆட்டோவின் குறுக்கே நாய் ஒன்று வந்துள்ளது. இதனால் பரமசிவம் ஆட்டோவை நிறுத்த திடிரென பிரேக் பிடித்துள்ளார். அப்போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள குளத்தில் விழுந்து மூழ்கியுள்ளது.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஓட்டுநர் பரமசிவத்தைப் பத்திரமாக மீட்டுள்ளனர். பயணிகள் யாரும் ஆட்டோவில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பின்னர் மீட்பு வாகனங்கள் கொண்டு வரப்பட்டு குளத்தில் மூழ்கிய ஆட்டோ மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தச்சநல்லுர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடையார்பட்டி குளம் நெல்லை-மதுரை சாலையில் அமைந்துள்ளது. இந்த சாலையை சீரமைக்க பலமுறை உரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை.மேலும்  விபத்துக்களைத் தடுக்கும் வகையில் குளத்திற்கு உடனடியாக தடுப்பு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |