Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

உடைக்கப்பட்ட பின் கதவு… பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலீசார் தீவிர விசாரணை…!!

வீட்டின் பின் கதவை உடைத்து 3 பவுன் தங்க சங்கிலியை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள அருள் நகரில் அந்தோணி தாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்ற நிலையில் அவரது மனைவி அல்போன்சா மற்றும் இரண்டு மகள்கள் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று அல்போன்சா அவரது ஒரு மகளுடன் தாலுகா அலுவலகத்திற்கும், மற்றொரு மகள் டியூசனுக்கும் சென்று விட்டனர்.

இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை திருடிச் சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்த அல்போன்சா பின்கதவு உடைக்கப்பட்டு இருந்ததையும், சங்கிலி காணாமல் போனதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக அழகப்பாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |