அப்போது, திடீரென்று வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை, ஒன்று தூங்கிக்கொண்டிருந்த 3 வயது சிறுவனை தரதரவென வெளியே உள்ள புதரில் இழுத்துச் சென்றுள்ளது. அந்த குழந்தையை கொடூரமாக கொன்றுவிட்டு தப்பியோடியுள்ளது.
இதையடுத்து, அதிகாலை குழந்தையை காணவில்லை என தேடிய பெற்றோர், வீட்டின் அருகில் புதரில் இறந்த நிலையில் குழந்தையின் உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.