Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேகமாக சென்ற பைக்… பின்னால் அமர்ந்து சென்ற நபர் கீழே விழுந்து மரணம்… வாகன ஓட்டி கைது..!!

பைக்கில் சென்ற போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில், பின்னால் அமர்ந்து சென்ற நபர் பலியானதால், வாகனம் ஓட்டிச் சென்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி..  இவரது வயது 34.. இவரது நண்பரின் பெயரும் முரளி.. இவரது வயது 48. இவர்கள் இருவருமே கூலித் தொழிலாளியாக வேலைபார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் 2 பேரும் இன்று காலை மதுரவாயல் பகுதியில் வேலைக்காக பைக்கில் சென்றுள்ளனர். அப்போது திருமங்கலம் மேம்பாலத்தின் மீது வேகமாக சென்று கொண்டிருந்த போது, திடீரென்று பைக்கிலிருந்து நிலைதடுமாறி 2 பேரும் கீழே விழுந்துள்ளனர்.

இதில், பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற 48 வயதுடைய முரளி என்பவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மற்றொரு முரளிக்கு பெரிதாக காயம் ஏற்படவில்லை.. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ததோடு, வாகனம் ஓட்டிய 34 வயதுடைய முரளி என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மரணமடைந்த முரளியின் சடலத்தைக் கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக  அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |