Categories
உலக செய்திகள்

மீண்டும் இயல்பு நிலைக்கு முன்னேறும்..! நஷ்டத்தை சந்தித்த விமான நிறுவனம்… துபாய் ஆட்சியாளர் பரபரப்பு அறிக்கை..!!

துபாய் ஆட்சியாளர் தற்போது நஷ்டத்தை சந்தித்திருக்கும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் மீண்டும் வழக்கமான நிலைக்கு முன்னேறும் என்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடத்தில் எமிரேட்ஸ் குழும்பத்தின் முதல் காலாண்டுக்கான வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில் திர்ஹாம்-ல் ரூ.2,210 கோடி நஷ்டம் இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதுவே எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் 30 ஆண்டுகால வரலாற்றில் முதலாவதாக ஏற்பட்டுள்ள நஷ்டம் என்று கூறப்படுகிறது. அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளரும், அமீரகத்தின் பிரதமருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பெருந்தோற்றால் பல விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், அந்த வகையில் எமிரேட்ஸ் விமான நிறுவனமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுவரை நஷ்டத்தையே சந்திக்காத எமிரேட்ஸ் விமானம் தற்போது சந்தித்துள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையை கடந்து மீண்டும் வழக்கமான நிலைக்கு முன்னேறும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் துபாய் தேசிய டிராவல் ஏஜென்சியான டனாடா நிறுவனமும், எமிரேட்ஸ் விமான நிறுவனமும் கூடிய விரைவில் முன்னேறும் என்று தெரிவித்துள்ளார். இந்த முன்னேற்றத்தின் மூலமாக பொதுமக்களுக்கும், உலகிற்கும் விமான போக்குவரத்து சேவைகள் சிறப்பாக வழங்கப்படும் என்றும், எமிரேட்ஸ் விமான நிறுவனம் உலகில் உள்ள மற்ற நாடுகளுடன் நெருக்கமாக முக்கியமான பங்கினை அளிப்பதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |