அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான கோவை செல்வராஜ் செய்தியாளர்களிடம் பேசிய போது, நீதிமன்றம் என்ன சொல்லி இருக்கிறது ? ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு என்று கூட்டிய கூட்டம் முறையான கூட்டம் அல்ல. இன்றைய தேதி வரைக்கு தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் தான் அதிமுக கட்சி செயல்படுகிறது. ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் அண்ணன் ஓபிஎஸ் தான் இருக்கிறார், அதனால் இந்த கட்சியை இன்றைக்கு வழிநடத்துபவர்கள் இவர்கள் இரண்டு பேர்தான்.
23ஆம் தேதி முதல் என்ன இருந்ததோ, அந்த நிலைப்பாட்டில் கட்சியை வழி நடத்துங்கள் என நீதிமன்றம் சொல்லி உள்ளது. இரண்டு பேரும் சேர்ந்து கையெழுத்திட்டு ஒரு கூட்டத்தை கூட்டலாம், அப்படி கூட்ட முடியாவிட்டால், தனிப்பட்ட முறையில் இவரும் கூட்ட முடியாது, அவரும் கூட்ட முடியாது அதைத்தான் நீதிமன்றம் சொல்லி இருக்கின்றது. அப்படி ஏதாவது பிரச்சனை என்றால் நீங்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
பொதுக்குழு என்பது ஆண்டுக்கு ஒருமுறைதான் கட்சியினுடைய பைலா விதியின் படி நடத்த வேண்டும், இரண்டு முறை, செயற்குழுவை கூட்டலாம் .அந்த அடிப்படை விதிகூட தெரியாமல் இவர்கள் எல்லாம் கட்சியில் பணியாற்றுவது வெட்கக்கேடாக இருக்கிறது. தளவாய் சுந்தரத்திற்கு கட்சியை பற்றி ஒன்றுமே தெரியாது, அதனால் அவர் கட்சி பைலாவை எடுத்து படிக்க சொல்லுங்கள்.
அதனால் இந்த கட்சியின் விதிமுறைப்படி நீதிமன்றம் சொன்னது படி, இரண்டு பேர் சேர்ந்து கையெழுத்து போட்டு கொண்டு வர வேண்டும். என்ன தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று, இரண்டு பேர் சேர்ந்து கையெழுத்து போட்டு 15 நாட்களுக்கு முன்னாடி பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டும், தீர்மானம் கொண்டு வரும்போது என்னென்ன தீர்மானம் என்பது இரண்டு பேரும் கையெழுத்து போட்டா தான் அந்ததீர்மானம் செல்லுபடி ஆகும்.
தனிப்பட்ட ஒருவரால் போட முடியாது, அப்போ இவர்கள் சொல்கிற மாதிரி ஒரு தலைமை, இரண்டு தலைமை எல்லாம் இல்லை. கட்சி கூட்டு தலைமை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் ஆணையத்தின் படி கட்சிக்கு பெயர் கொடுப்பது, சின்னம் கொடுப்பது, கொடி கொடுப்பது, கட்சிக்கு அங்கீகாரம் கொடுப்பது நீதி,மன்றம் அல்ல, தேர்தல் ஆணையம் தான் என தெரிவித்தார்.