ராமநாதபுரம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் மாவு மில் இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் உள்ள அலியார் சாலை கோலியார்க்கோட்டையில் மாவு மில் ஓன்று செயல்பட்டு வந்துள்ளது. இதனை இஸ்மாயில் என்பவர் நடந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம்போல மாவு மில் செயல்பட்டு வந்த நிலையில் அதிக வெயிலின் காரணமாக அங்கிருந்த எந்திரத்தில் தீப்பிடித்துள்ளது.
இதனைப்பார்த்த ஊழியர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக வெளியே ஓடியுள்ளார். இதனையடுத்து இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.