Categories
மாநில செய்திகள்

8ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது-பள்ளி கல்வித்துறை

8ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.

அரசு கல்வித்துறை சார்பில் கடந்த 3ம் தேதி ஒரு சுற்றறிக்கை ஒன்று வெளியானது. அந்த சுற்றறிக்கையில் 8ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு ஏப்ரல் 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடத்தப்படும் என்றும் பொதுத்தேர்வுக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் கண்காணிப்பாளர்களை நியமனம் செய்து அதற்குரிய அறிக்கைகளை 13ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தேர்வு துறை இயக்குனர் உஷா ராணி உத்தரவிட்டுள்ளதாக இடம்பெற்றுள்ளது.

3ம் தேதி வெளியான சுற்றறிக்கையானது கல்வித்துறை மத்தியிலும், மாணவர்கள் வட்டாரங்களிலும் பெரும் சர்சையை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் 8ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்புகான பொதுத்தேர்வுகளை ரத்துசெய்து கல்வித்துறை அரசாணை ஒன்றை வெளியிட்டது.

தற்போது தேர்வு துறை இயக்குனர் உஷா ராணி இதுகுறித்த விளக்கத்தை அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் 8ம் வகுப்பிற்கு வெளியான சுற்றறிக்கையானது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. இந்த சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள தேதிதியில் தனித்தேர்வர்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு நடைபெறும் எனவும் மாணவர்களும், ஆசிரியர்களும் பயப்பட வேண்டாம் எனவும் அவர் கூறினார்.

Categories

Tech |