Categories
சினிமா தமிழ் சினிமா

முடிவானது நயன்தாராவின் திருமணம்…. இணையத்தில் வெளியான தகவல்….!!!

நயன்தாராவின் திருமணம் முடிவாகிவிட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருகின்றனர். இதனிடையே, இவர்கள் வெளிநாடுகளில் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் கோவில்களுக்கு சென்று இருவரும் எடுக்கும் புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

சமீபத்தில், விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், நயன்தாரா பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் அவர் தனது விரலில் மோதிரத்தை காட்டி இது தனது நிச்சயதார்த்த மோதிரம் எனவும், எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது எனவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, ரசிகர்கள் அனைவரும் திருமணம் எப்போது என்ற கேள்வியை இவர்களிடம் கேட்டு வருகின்றனர். இந்நிலையில், நயன்தாராவின் திருமணம் அடுத்த வருடம் நடைபெற உள்ளதாகவும், இவர்களின் திருமண தேதியை திருப்பதி கோவிலில் இருக்கும் புரோகிதர்களை வைத்து முடிவு செய்துவிட்டதாகவும் இணையத்தில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.

Categories

Tech |