கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பிள்ளையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் கால்நடை இடைத்தரகர்களை நான்கு சக்கர வாகனத்தில் ஏற்றிச் செல்லும் வேலையில் ஈடுபட்டுவருகிறார். இவருக்கும் கால்நடை இடைத்தரகரான அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் கால்நடை வியாபாரங்கள் செய்வதில் முன்விரோதம் இருந்துவந்தது.
தெருவில் சென்றபோது வெங்கடேசனுக்கும் சிலம்பரசனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், சிலம்பரசனை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றார்.
இதில் படுகாயமடைந்த சிலம்பரசனை கிராம மக்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த திருநாவலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனைத் தேடிவருகின்றனர்.