Categories
தேசிய செய்திகள்

சவாலான நேரத்தில் ஒட்டுமொத்த தேசமும் மேற்கு வங்கத்துடன் ஒற்றுமையுடன் நிற்கிறது – பிரதமர் மோடி ட்வீட்!

ஒட்டுமொத்த தேசமும் மேற்கு வங்கத்துடன் ஒற்றுமையுடன் நிற்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

வங்கக் கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த ஆம்பன் புயல் நேற்று மேற்கு வங்கம் மற்றும் வங்க தேசத்தின் இடையே, திஹா மற்றும் சுந்தர்பன் ஹத்தியா தீவுகள் இடையே நகர்ந்து சென்றது. பிற்பகல் 3 மணிக்கு திஹா – சுந்தர்பன் பகுதிக்கு இடையே கரையைக் கடக்க தொடங்கிய புயல் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நகர்ந்து, சுமார் 7 மணியளவில் கரையை கடந்தது. இந்த புயலால் மேற்கு வங்கம் முழுவதும் உருக்குலைந்து காணப்படுகிறது.

ஆம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர் இந்த நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, சவாலான நேரத்தில் ஒட்டுமொத்த தேசமும் மேற்கு வங்கத்துடன் ஒற்றுமையுடன் நிற்கிறது என கூறியுள்ளார் நாட்டு மக்கள் அனைவரும் மேற்கு வங்க மக்களின் நல வாழ்விற்காக பிராத்திப்போம்.

மேற்கு வங்கத்தில் விரைவில் இயல்புநிலை திரும்ப முயற்சிகள் நடைபெறுகிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் சூறாவளி பாதிக்கப்பட்ட பகுதிகளில் என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் செயல்படுகின்றன. உயர் அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறார்கள், மேலும் மேற்கு வங்க அரசாங்கத்துடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் செயல்படுகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் எந்த தடையும் இல்லை என தெரிவித்துள்ளார். முன்னதாக மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 29ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு தமது ட்விட்டர் பக்கத்தில் அஞ்சலியை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |