Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“வயிற்றில் பெண் குழந்தை” அபார்ஷன் செய்த போலி டாக்டர்…. பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…!!

வயிற்றில் உள்ள குழந்தையை கண்டறிந்து கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் பக்கத்தில் கோபாலபுரம் குட்டைக்காடு கிராமத்தில் வசிப்பவர் விவசாயியான சரவணன் என்பவரின் மனைவி பூங்கொடி. இவருடைய மகள் சரண்யா(29). இவர் திருமணமாகி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். இதையடுத்து சரண்யா இரண்டாவதாக கர்ப்பம் அடைந்துள்ளார். இது பற்றி தன்னுடைய தாயார் பூங்கொடியிடம் தெரிவித்தபோது தாய் பூங்கோடி அவருடைய தோழியான அலமேலுவிடம்  ஆலோசனை கேட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு தெரிந்த பெண் செவிலியர் ஒருவர் உள்ளார் என்றும் அவர் மூலம் ஸ்கேன் செய்து கொள்ளலாம் என்றும் கூறினார்.

இதையடுத்து அவர்கள் கஜல் நாயக்கன்பட்டியில் உள்ள சிவ பிருந்தாதேவி என்பவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அவருடைய பரிந்துரையின்படி ஆத்தூர் புகழ் என்பவருக்கு சொந்தமான ரத்தப் பரிசோதனை நிலையத்தில் ஸ்கேன் செய்தபோது சரண்யா வயிற்றில் பெண் குழந்தை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆத்தூரை சேர்ந்த பூமணி என்ற போலி மருத்துவரிடம் கருக்கலைப்பு செய்துள்ளார். இதனால் சரண்யா திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு ரத்தப் போக்கு அதிகமாகியுள்ளது.

இதையடுத்து சரண்யாவை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று பரிசோதனை செய்து அப்போது சரண்யாவிற்கு கருக்கலைப்பு செய்திருப்பது மருத்துவர் சம்பத்துக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து கேட்டபோது நடந்த அனைத்தையும் சரண்யா கூறியுள்ளார். இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் பூங்கொடி, அலமேலு, சிவ பிருந்தா, புகழ், பூமணி ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |