முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங் எனது குடும்பமே சமந்தாவின் ரசிகர்களாக மாறிவிட்டோம் என்று பதிவு செய்துள்ளார்.
நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் தொடர் அமேசானில் வெளியாகியுள்ளது. இத்தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பாரதிராஜா, சீமான், வைகோ உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பலர் இத்தொடரை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மற்றொரு முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், தி ஃபேமிலி மேன்2 தொடரில் நடித்துள்ள மனோஜ் பாஜ்பாயின் நடிப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்றும் நடிகை சமந்தா நடித்துள்ள ராஜி கேரக்டரையும் அற்புதம் என பாராட்டியுள்ளார். மேலும் இதனை பார்த்த பின்பு எனது குடும்பமே சமந்தாவின் ரசிகர்களாக மாறி விட்டோம் என்றும் பதிவு செய்துள்ளார்.