Categories
உலக செய்திகள்

கொரானா தோன்றிய சந்தையில் 40 நாட்களாக பதுங்கி வாழ்ந்து வந்த குடும்பம்..! தற்போதய நிலை என்ன..?

கொரானா வைரஸ் தோன்றியதாக கூறப்படும்  சீனாவின் வூஹான் நகர உணவுச் சந்தையில் இரகசியமாக வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்தை அதிகாரிகள் நேற்று மீட்டுள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் வழக்கம்போல கிருமி நாசினி தெளிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர் வந்துள்ளனர்.

அப்போது  வூஹான்  நகரின் முக்கிய உணவுச் சந்தையில் இ ரகசியமாக வாழ்ந்து வந்த 4 பேர் கொண்ட குடும்பத்தை கண்டறிந்துள்ளன. அதிகாரிகள் உடனடியாக அந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை மற்றும் வயதான உள்ளிட்ட 4 பேரை மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

 

மாநகரின் முக்கிய பகுதிகள்  அனைத்தும் கடந்த 40 நாட்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ள நிலையில் இந்த சந்தையில் மிக இரகசியமாக அங்கேயே தங்கி வந்துள்ளனர்.

பின்னர் அந்த  நால்வரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில் அந்த நால்வரில் எவருக்குமே கொரானா தொற்று இல்லை என்று உறுதியானது. இருப்பினும் அவர்கள் 4 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அந்த சந்தையில் பணியாற்றி வருபவர்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் மட்டும்   தற்போது வரை சீனாவில்  கொரானா வைரசால்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,070-ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,651-ஆக  உயர்ந்துள்ளது.

 

Categories

Tech |