கோவில் கட்டுமான பணிகளுக்காக மொய்விருந்து நடத்தி பணம் கொடுத்துள்ள குடும்பத்தினரை ஊர் மக்கள் பாராட்டியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் வசிப்பவர் பாலவேலாயுதம். இவர் கடந்த 18 வருடங்களாக வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் மகன், மகள் உள்ளனர். இந்நிலையில் பாலவேலாயுதம், அவருடைய மகன் ரெங்கேஸ்வரன் மற்றும் குடும்பத்தினர் நெடுவாசல் பகுதியில் மொய் விருந்து நடத்தி உள்ளனர். இந்த மொய் விருந்தில் மொத்தம் 31,64271 ரூபாய் வந்துள்ளது. இந்த மொய் பணத்தை அந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் சிவன் கோவில் கட்டுமான பணிகளுக்காக வழங்கியுள்ளனர்.
இந்த கோவில் கட்டுமானப் பணிக்கு பாலவேலாயுதம் ஏற்கனவே 16 லட்சம் ரூபாய் நிதி கொடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செயலுக்கு அவருடைய குடும்பத்தினரையும், பாலவேலாயுதத்தையும் கிராம மக்கள் வாழ்த்தி வருகின்றனர். இது குறித்து அவருடைய மகன் ரெங்கேஸ்வரன் கூறுகையில், “என் தந்தை தீவிர சிவபக்தர். இதையடுத்து நெடுவாசல் சிவன் கோவில் கட்டுமானப் பணிகளுக்காக என் அப்பாவின் விருப்பப்படி மொய்விருந்து நடத்தி பணம் வழங்கியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.