ராமநாதபுரத்தில் வைத்து நடந்த கார் விபத்தில் சிறுவன் உயிரிழந்த நிலையில் 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் தபால் தந்தி நகரில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் புவனேஸ்வரன்(16) இந்நிலையில் திருவாரூரில் உள்ள ஒரு கோவிலுக்கு செல்வதற்காக முத்துசாமி மற்றும் அவரது உறவினர்கள் நேற்று காரில் புறப்பட்டு சென்றுள்ளனர். இதனையடுத்து ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அந்த கார் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக குறுக்கே மாடு ஓன்று வந்துள்ளார். இதனைப்பார்த்த கார் ஓட்டுநர் கணேசன் உடனடியாக காரை நிறுத்த முயன்றுள்ளார். அப்போது கார் நிலைதடுமாறி அங்கிருந்த வயல்காட்டில் கவிழ்ந்து விழுந்துள்ளது.
இந்த விபத்தில் சிறுவன் புவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் காரில் இருந்த ஓட்டுநர் கணேசன், முத்துசாமி, அன்னசெல்வி, கார்த்திகா, சிவரஞ்சனி ஆகியோருக்கு பலத்த காவல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடலாடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலாடி மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.