பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் நேரா பதேகி. இவர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தேசியக்கொடியை தலைகீழாக பிடித்தது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடிகை நேரா பதேகியின் நடனம் இடம்பெற்றது. இந்த நடனத்தை பலரும் கண்டு களித்தனர். இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 29-ம் தேதி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் போது நடிகை நேரா பதேகி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய கொடியை பிடித்திருந்தார். அப்போது தேசிய கொடியை அவர் தலைகீழாக பிடித்திருந்தார். இந்நிலையில் தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு சர்வதேச அரங்கில் இருக்கும் போது இந்திய நாட்டின் தேசியக்கொடியை இப்படி தலைகீழாக மெத்தனமாக பிடிப்பது மிகவும் தவறு என்று பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
https://www.instagram.com/reel/CljduQ9h5lP/?utm_source=ig_embed&ig_rid=cc0759ee-064c-49be-b6b2-6ad415728be7&ig_mid=817F2BD6-817D-4B95-BDAE-ADBC67F19796