வெற்றிமாறனின் பட வாய்ப்பை பிரபல நடிகை நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்தவகையில், இவர் தற்போது சூரியை வைத்து ‘விடுதலை’ படத்தை இயக்கி வருகிறார்.
மேலும், இவரின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2018 ல் வெளியான திரைப்படம் ”வடசென்னை”. இந்த படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். மேலும், வடசென்னை படத்தில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்நிலையில், இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரத்தில் முதலில் நடிகை சமந்தா நடிக்க இருந்ததாகவும், அந்த படத்தில் நிறைய கெட்ட வார்த்தைகள் பேசவேண்டி இருந்ததால் இந்த படத்தை அவர் நிராகரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.