பிரபல நடிகை தனது காதல் கணவரை கன்னத்தில் அறையும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வெளியான வருஷமெல்லாம் வசந்தம் திரைப்படத்தின் அறிமுகமானவர் நடிகை அனிதா ஹசானந்தனி. இதைத்தொடர்ந்து சாமுராய், சுக்கிரன், மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் அனிதா. அதன்பிறகு ரோகித் ரெட்டி என்பவரை காதலித்து வந்த அவர் கடந்த 2013ம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.
இதைதொடர்ந்து கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அனிதா ஹசானந்தனி கணவர் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தன் மனைவி கையில் திடீரென அறை வாங்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.