பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே தனது 34வது பிறந்தநாளை தனது கணவர் மற்றும் ரசிகர்களுடன் இணைந்து மும்பை விமான நிலையத்தில் கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்று தனது 34வது பிறந்த நாளை கொண்டாடும் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே லக்னோவில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து பிறந்த நாளைச் சிறப்பிக்கும் முடிவில் லக்னோ சென்று வந்தார்.
அந்த வகையில் தனது கணவர் ரன்வீர் சிங்குடன் மும்பை விமான நிலையம் வந்த அவரது ரசிகர்கள் சூழ்ந்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவர்கள் கொண்டுவந்திருந்த பிறந்தநாள் கேக்கை தீபிகா வெட்டி ரசிகனுக்கு ஊட்டிவிட்டு பின் புகைப்படம் எடுத்து தனது பிறந்த நாளை கொண்டாடினார்.