Categories
உலக செய்திகள்

வரலாற்று மிக்க புதிய சாதனை… ஜப்பான் பிரதமர்…!!

ஜப்பான் நாட்டின் பிரதமராக சுமார் 8 வருட காலமாக நீடித்து நின்று ஷின்சோ அபே சாதனை படைத்துள்ளார்.

சென்ற 2012ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை ஜப்பான் நாட்டின் பிரதமராக ஷின்ஸோ அபே  பதவியில் நிலைகொண்டு வருகிறார். இன்று வரை எடுக்கப்பட்ட கணக்கின்படி, 2,799 நாள்கள் அவர் பதவியில் இருந்துள்ளார். இதன் மூலம், அந்நாட்டில் அதிக வருடங்கள் ஆட்சிப் புரிந்து வரும் பிரதமர் என்ற சாதனையை அவர் தனது பதவியின் மூலம் நிரூபித்துள்ளார். 1964 முதல் 1972ஆம் ஆண்டு வரை சுமார் 2,798 நாள்கள் பணியாற்றியுள்ள தனது உறவினர் ஈசாகு சாடோவின் சாதனையை இதன்மூலம் அபே, முறியடித்துள்ளார்.

பிரதமர் அபேயின் பதவிக் காலம் முடிவடைய இன்னும் ஒரு வருடம் இருப்பதால், யாரும் நெருங்க முடியாத வரலாற்று சாதனையை படைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, உடல்நல பிரச்னைகள், கொரோனா தொற்றைக் கையாள்வதில் ஏற்பட்ட மன சோர்வு போன்ற காரணங்களால், கடந்த வாரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அபே அனுமதிக்கப்பட்டார். பல மணி நேரம் நீடித்த மருத்துவப் பரிசோதனைக்கு பிறகே அவர் வீடு திரும்பினார்.

இந்நிலையில் நேற்று மீண்டும் கியோ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அபே வந்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த வாரம் பரிசோதனையின் விரிவான முடிவுகள் குறித்து மருத்துவமனையில் மறுபரிசீலனை செய்யவும், கூடுதல் பரிசோதனைகள் செய்யவும் வந்தேன். நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதை உறுதி செய்கிறேன். தொடர்ந்து உழைக்கத் திட்டமிட்டுள்ளேன்” இவ்வாறு அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |