ஆந்திர மாநிலம் திருப்பதியில் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பஞ்சபூத தலங்களில் வாயுத்தலமாக கருதப்படுகிறது. அதன் பிறகு கோவிலில் உள்ள மூலவர் சுயம்புலிங்க வடிவத்தில் காட்சி புரிகிறார். இந்நிலையில் நாளை சூரிய கிரகணம் என்பதால் அனைத்து கோயில்களின் நடையும் சாத்தப்பட்டு இருக்கும். ஆனால் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் திருக்கோவில் மமட்டும் திறந்தே இருக்கும் என்று தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது கோவிலில் உள்ள மூலவருக்கு சூரியனும், சந்திரனும் கட்டுப்பட்டவர் என்பதால் சூர்ய மற்றும் சந்திர கிரகணத்தின் போது நடைகள் சாத்தப்படுவது கிடையாது. இதனால் பக்தர்கள் எப்போதும் போன்று சாமி தரிசனத்திற்காக கோவிலுக்கு செல்லலாம். மேலும் சூரிய கிரகணம் முடிவடைந்த பிறகு கோவிலை தண்ணீரால் சுத்தம் செய்துவிட்டு மூலவருக்கு சாந்தி பூஜை செய்வார்கள்.
அதன் பிறகு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதன்பிறதி கோவிலில் தீபாவளிக்கு மறுநாள் வருடம் தோறும் வழக்கமாக நடத்தப்படும் கோதா கௌரி பூஜையானது நாளை சூரிய கிரகணம் என்பதால் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது