Categories
சினிமா தமிழ் சினிமா

அமேசானிடம் ‘அண்ணாத்த’ அப்டேட்டை கேட்ட ரசிகர்…. அப்செட்டான காரணம் என்ன…?

ரஜினி ரசிகர் ஒருவர் அண்ணாத்த பட அப்டேட்டை அமேசான் நிறுவனத்திடம் கேட்டுள்ளார்.

முன்னணி நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக ரஜினி தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றுள்ளார். இந்நிலையில் அண்ணாத்த  படத்தின் அப்டேட்டை கேட்டு ரஜினி ரசிகர்கள் சன் பிக்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு டேக் செய்து ட்விட்டரை திணறடித்து வந்துள்ளனர்.

அதில் ஒரு ரசிகர் அமேசான் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை டிவிட்டர் கணக்கில் அண்ணாத்த அப்டேட்டை கேட்டுள்ளார். அப்படிக் கேட்ட ரஜினி ரசிகருக்கு அமேசான் நிறுவனம் பதிலளித்துள்ளது. அதில், அண்ணாத்த படத்தையும் குறித்த எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாமல், அப்டேட்டை தெரிந்து கொள்ள எங்கள் இணையத்தைப் பாருங்கள் என்று சொன்னதால் ரஜினி ரசிகர் அப்செட் ஆகிபோனார்.

Categories

Tech |