திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஸ்ரீரங்கன் புதூரைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் விவசாயத்தை பிரதானத் தொழிலாக செய்து வருகிறார். தமிழ்நாட்டையே உலுக்கிய மணப்பாறை சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் சிக்கி, உயிரிழந்த சம்பவத்தையடுத்து, குழந்தையைக் காப்பற்றும் விதமாக 30 நொடிகளில் குழந்தையின் கையைப் பிடித்து தூக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.
குறிப்பாக, மின்மோட்டார் மூலம் இயங்கும் கியர் செயின் மூலம் மற்றொரு கியரை இணைத்து, கையை கவ்விப்பிடிக்கும் வண்ணம் வடிவமைத்துள்ளார். இந்த இயந்திரத்தை கையால் சுழற்ற முடியாது. கேமரா, ஆக்ஸிஜன் குழாய், மின் விளக்கு உள்ளிட்டவற்றைப் பொருத்தி குழந்தையை 10 நிமிடங்களில் காப்பாற்றும் விதமாக கருவியைக் கண்டுபிடித்துள்ளார். மேலும், இந்த எளிய புதிய தொழில்நுட்பத்தை அரசு ஏற்று பரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.