தமிழ்நாட்டின் விதி மாறும் என தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி ட்வீட் செய்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக இன்று (நவ.21) தமிழ்நாடு வருகிறார். சென்னை விமான நிலையம் வரும் அமித் ஷா சென்னை பழைய விமான நிலையம் ஆறாவது கேட் வழியாக வெளியே செல்கிறார்.இதனையொட்டி சென்னை பழைய விமான நிலையம் முழுவதும் காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்களால் அலங்கார வளையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இன்று (நவ.21) காலை 10 30 மணிக்கு டெல்லியிலிருந்து புறப்படும் அவர், பிற்பகல் 1.40 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவரை அவருக்கு தமிழ்நாடு அரசு மற்றும் பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மாலை 4 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய் கண்டிகையில் நீர்த்தேக்கம் திட்டத்தினை காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார். அதேபோன்று மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தை தொடங்கிவைப்பார்.
அவரது வருகையையொட்டி சென்னை விமான நிலையம், எம்ஆர்சி நகர் நட்சத்திர விடுதி வளாகம் மற்றும் கலைவாணர் அரங்கம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மொத்தம் 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சென்னை விமான நிலையம் முழுவதும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இந்நிலையில் பாஜகவின் தமிழக பொறுப்பாளர் சிடி ரவி தனது ட்விட்டர் பக்கத்தில், எதிரிகள் அவர்தம் படை புகுந்து நைய புடைய எம்தலைவன் வருகிறார் தமிழ்நாட்டின் விதிமாறும் இனி காண்பீர் எதிர்ப்போர் யாவரும் விலகுவீரே என ட்விட் செய்துள்ளார்.
எதிரிகள் அவர்தம் படை புகுந்து
நைய புடைய எம்தலைவன் வருகிறார்
தமிழ்நாட்டின் விதிமாறும் இனி காண்பீர்
எதிர்ப்போர் யாவரும் விலகுவீரே #TNwelcomesAmitshah pic.twitter.com/FpHTtuceBs— C T Ravi 🇮🇳 ಸಿ ಟಿ ರವಿ (@CTRavi_BJP) November 21, 2020