தந்தை தொழிலுக்கு மகன் வராத விரக்தியில் தந்தை தற்கொலை செய்துகொண்டார்.
திருக்கனூரை சேர்ந்தவர் அழகப்பன். அறுவடை தொழில் செய்து வரும் அழகப்பன் தனது மகனையும் தனது தொழிலைச் செய்யுமாறு அழைத்துள்ளார். ஆனால் மகன் கதிரவன் அறுவடை தொழிலுக்கு வரப்போவதில்லை எனக்கூறியுள்ளார். இதனால் தந்தை மகன் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்றும் தொழில் தொடர்பாக தந்தை மகன் இடையே தகராறு ஏற்படவே அழகப்பன் கோபம் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அழகப்பன் வீடு திரும்பாத நிலையில் திருக்கனூர் ஏரிக்கரையில் அவரது சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த திருக்கனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் மகனுடன் ஏற்பட்ட தகராறில் அழகப்பன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது.