தனியார் பள்ளியில் தங்கி படிக்கும் மகளை அழைத்து வர சென்ற தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள நெய்வேலியில் பாலசுந்தரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்.எல்.சி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாலசுந்தரம் நாமக்கல்லில் இருக்கும் தனியார் பள்ளியில் தங்கி படிக்கும் தனது மகள் ஸ்வேதாவை அழைத்து வருவதற்காக காரில் சென்றுள்ளார். அதன்பின் மகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து காரில் நெய்வேலிக்கு புறப்பட்டுள்ளார்.
அப்போது சிறுபாக்கம் சோதனைச்சாவடி மையம் அருகில் அந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலையில் இருந்த புளியமரத்தில் மோதி நின்றுள்ளது. இதில் படுகாயமடைந்த பாலசுந்தரம் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பின்னர் பலத்த காயமடைந்த மகள் ஸ்வேதாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு ஸ்வேதாவிற்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.