ஐந்தாவது மாடியில் இருந்து பெண் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் ஊர்மிளா சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் நாவலூரில் இருக்கும் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியவேளையில் ஊர்மிளாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய ஊர்மிளா நிறுவனத்தின் ஐந்தாவது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து விட்டார்.
இதில் சம்பவ இடத்திலேயே ஊர்மிளா உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஊர்மிளாவை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் ஊர்மிளாவின் பெற்றோருக்கும் தகவல் அளித்துள்ளனர். திடீரென பெண் இன்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.